உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!
உடல் எடையை குறைப்பது சிலருக்கு பிரச்சனை என்றால், உடல் எடையை அதிகரிப்பது பலருக்கும் பெரும் போராட்டமாக இருக்கும். எவ்வளவுதான், சத்தான உணவுகள், ஜூஸ்கள், டயட்களை பின்பற்றினாலும் கூட சரியான ரிசல்ட் கிடைப்பதில்லை. உடல் எடை குறைவாக இருப்பது, உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல. இது சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, மற்றும் பல உடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடும். ஆரோக்கியமான வழிகளில் எடையை அதிகரிக்க இயற்கையான உணவுகள் மிகவும் உதவுகின்றன. உடல் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள் மற்றும் வழிமுறைகளை தெளிவாகப் பார்ப்போம்.
உடல் எடையை அதிகரிக்க புரதம் நிறைந்த உணவுகள்
முட்டை
முட்டை உடல் வளர்ச்சிக்குப் பெரிய ஆதாரமாகும். இதில் உள்ள அதிக புரதம் மற்றும் கொழுப்பு எடையை விரைவாக அதிகரிக்க உதவுகிறது. முட்டையை வேக வைத்து சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது. அதிலும் குறிப்பாக முட்டையின் மஞ்சள் பகுதி அதிக சத்துக்கள் கொண்டது. தினசரி 2-3 முட்டைகள் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்.
நாட்டுக்கோழி மற்றும் மீன்
நாட்டுக்கோழி மற்றும் மீன்களில் மிகச் சிறந்த அளவில் புரதம் உள்ளது. குறிப்பாக சால்மன் மீனில் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது உடலின் மொத்த வளர்ச்சிக்கும் உதவுகிறது.
கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்
உடல் எடையை அதிகரிக்க நிறைய கலோரிகளை சேர்க்க வேண்டும். அதற்கான எளிமையான வழி, அதிக கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உணவுப் பழக்கமாக மாற்றுவது.
வாழைப்பழம்
வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்க உதவும் எளிய வழியாகும். ஒரு வாழைப்பழத்தில் 100 கலோரி இருக்கிறது. தினசரி வாழைப்பழம் சாப்பிடுவதால் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்கும்.
மக்காச்சோளம் மற்றும் உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு மற்றும் மக்காச்சோளத்தில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் உள்ளது. இதன் மூலம் உடலில் தேவையான சக்தி கூடவும், எடையும் அதிகரிக்கவும் முடியும்.
உங்க BMI எவ்ளோ இருக்குனு Check பண்ணுங்க..
கொழுப்பு சத்துக்களை பெற தேவையான உணவுகள்
உடலில் ஆரோக்கியமான கொழுப்பு சேர்ப்பது மிகவும் அவசியம். இதில் தேவைப்படும் கொழுப்புகளை இயற்கை உணவுகளில் இருந்து பெறலாம்.
வெண்ணெய் மற்றும் நெய்
வெண்ணெய் மற்றும் நெய் உடலில் தேவையான கொழுப்புகளை சேர்க்க உதவுகின்றன. இது உடல் எடையை அதிகரிக்க மட்டும் அல்லாமல், உங்கள் ஹார்மோன் நிலையை சீராக்கவும் உதவும்.
நட்ஸ் மற்றும் விதைகள்
நட்ஸ் (அக்ரூட், பாதாம், பிஸ்தா) மற்றும் விதைகளில் (சியா விதை, வெள்ளரிக்காய் விதை) கொழுப்புகள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன. தினசரி சிறு அளவில் நட்ஸ் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க உதவும்.
கலோரி அதிக உணவுகள்
உடலுக்குத் தேவையான கலோரி குறைவாக இருந்தால் உடல் எடையை அதிகரிக்க முடியாது. அதற்காக நாம் தினசரி உணவில் கலோரி அதிகம் கொண்ட உணவுகளை சேர்க்க வேண்டும்.
உலர் பழங்கள்
உலர் திராட்சை, பாதாம், பிஸ்தா போன்ற உலர் பழங்களில் அதிக அளவு கலோரி உள்ளது. இது உடல் எடையை அதிகரிக்க உடனடி உதவியாக அமையும்.
சில சுவையான ஆரோக்கியமான கலவைகள்
உலர் பழங்களை நெய் அல்லது பால் சேர்த்து சாப்பிடுவது எடையை அதிகரிக்க சிறந்த வழியாகும். இது உங்கள் உடல் வளர்ச்சிக்கும் பயன்படும்.
உடல் எடையை அதிகரிக்க பால் மற்றும் பால் பொருட்கள்
பால்
பாலில் உள்ள புரதம் மற்றும் கொழுப்பு உடலின் வளர்ச்சிக்கு உதவும். சாப்பாட்டிற்கு பிறகு அல்லது காலை உணவுடன் பாலைக் குடிப்பது நல்லது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
- குளிர்பானங்கள்
- ஃபாஸ்ட் ஃபுட்ஸ்
- பிராசச்ட் ஃபுட்ஸ்
முடிவுரை:
உடல் எடையை அதிகரிக்க உணவுப் பழக்கங்கள் மட்டுமல்ல, சரியான வாழ்க்கை முறையும் அவசியம். நேரத்திற்கு சாப்பிடுவது மட்டுமின்றி, போதுமான அளவிற்கு தூக்கம் அவசியம்.